தென் கொரியாவில் 470 பேருடன் கப்பல் கவிழ்ந்தது - காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தக் காணொளியில் ஒலி வர்ணனை இல்லை.

தென் கொரியாவின் தென் கடற்கரைக்கு அருகே 470 பயணிகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அதை மீட்கும் பணியில் டஜன் கணக்கான கப்பல்களும் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுவருகின்றன.

இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பலர் அந்த கப்பலின் ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்டுவருகின்றனர். மேலும் சிலர் கப்பலிலிருந்து கடலில் குதித்துள்ளனர்.

ஆனால் நூற்றுக்கும் அதிகமான பயணிகள் கதி குறித்து இதுவரை எந்தத் தகவல்களும் இல்லை.

பயணித்தவர்களில் பெரும்பாலானோர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். ஜெஜு என்ற ஒரு சுற்றுலா தீவுக்கு அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

மோசமான காலநிலை நிலவுவதாக செய்திகள் இருந்த நிலையில்,ஏன் கப்பல் பயணிக்க அனுமதி தரப்பட்டது என்று பெற்றோர் என்று கேள்வி எழுப்புகின்றனர்.