விமானத் தேடல் பணிகள் 'நெருக்கடியான கட்டத்தில்'

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆழ்கடலில் 10 கிலோமீட்ட சுற்றுப் பரப்புக்குள் நீர்மூழ்கி ஆராய்ந்து வருகிறது

காணாமல்போன மலேசிய விமானத்தை தேடும் பணிகளின் தற்போதைய கட்டத்தை ஒருவார காலத்துக்குள் முடித்துக் கொள்ளவுள்ளதாக அந்தப் பணிகளை ஒருங்கிணைத்துவரும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வந்த ஒலிச் சமிக்ஞைகள் என்று நம்பப்படும் சத்தங்கள் உணரப்பட்ட பகுதியின் 10 கிலோமீட்டர் சுற்றுப் பரப்புக்குள் கடலின் தரைப்பகுதியை நீர்மூழ்கி ஒன்று துளாவி அங்குள்ளவற்றை பதிவுசெய்து வருகின்றது.

இந்து சமுத்திரத்தின் ஆழத்திற்கு ஏழாவது தடவையாகவும் அனுப்பப்பட்டுள்ள ப்ளூஃபின் ஆளில்லா நீர்மூழ்கி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

விமானத்தை தேடும் பணி ஒரு 'நெருக்கடியான நிலையை' அடைந்துள்ளதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.