தென்கொரியக் கப்பலில் நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் மீட்பு

தென்கொரியக் கப்பலில் நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் மீட்பு படத்தின் காப்புரிமை AP
Image caption தென்கொரியக் கப்பலில் நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் மீட்பு

கடந்த வாரம் நீரில் மூழ்கிய தென்கொரியக் கப்பலில் இருந்து நூற்றுக்கும் அதிகமான சடலங்கள் இப்போது மீட்கப்பட்டுள்ளன.

பல சடலங்களை சுழியோடிகள் கப்பலின் அறைகளிலும், கூடங்களிலும் கண்டு பிடித்துள்ளனர்.

மேலும் பலரது சடலங்கள் கிடைக்கக் கூடியதாக எதிர்பார்க்கப்படும் ஒரு உணவு விடுதிக்கு போவதற்கு, வழி ஏற்படுத்த சுழியோடிகள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் உட்பட, கிட்டத்தட்ட இருநூறுபேரை இன்னமும் காணவில்லை.

கப்பல் அளவுக்கு அதிகமாக சாய்ந்துவிட்டதால், தம்மால் உயிர்காப்பு படகுகளை இறக்க முடியாமல் போய் விட்டதாக, தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.

கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஆலோசனையுடன் கப்பலை நிமிர்த்திப் பார்ப்பதற்கு தாம் முயற்சிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.