கால்பந்து உலகக் கோப்பை நடக்கவிருக்கும் பிரேஸிலில் வன்முறை

கால்பந்து உலகக் கோப்பை நடக்கவிருக்கும் பிரேஸிலில் வன்முறை படத்தின் காப்புரிமை GETTY
Image caption கால்பந்து உலகக் கோப்பை நடக்கவிருக்கும் பிரேஸிலில் வன்முறை

உலகக் கோப்பை உதைபந்தாட்ட இறுதிப் போட்டிகள் நடப்பதற்கு இரு மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், பிரேஸிலின் நகரான ரியோ டி ஜெனிரோவில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த வன்செயல்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

முன்னதாக ஒரு உள்ளூர் நபர் இறந்ததை அடுத்து போலீஸாருக்கும், குடிசைகளை அதிகமாகக் கொண்ட ஒரு வறிய நகரின் வாசிகளுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.

போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றின் உறுப்பினர் என்று தவறுதலாக நினைத்து அவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

வறுமை மிகுந்த அந்த நகருக்கு அருகே, கார்களையும், டயர்களை ஊர்வாசிகள் எரித்ததை அடுத்து, கொப்பகபானா என்னும் சுற்றுலாப்பயணிகளுக்கு பிரபல்யமான நகரின் முக்கிய வீதிகள் மூடப்பட்டன.

அந்த வறிய மக்களின் வாழ்விடமான நகரின் வாயிலில், இறந்த நபரின் மரணத்துக்கு நீதி கோரி பெருமளவிலான ஆட்கள் திரண்டுள்ளனர்.