பாலத்தீனக் குழுக்கள் இடையே நல்லிணக்க உடன்பாடு

பாலத்தீனக் குழுக்கள் இடையே நல்லிணக்கம் படத்தின் காப்புரிமை AFP
Image caption பாலத்தீனக் குழுக்கள் இடையே நல்லிணக்கம்

காசாவில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து, பாலத்தீன போட்டிக்குழுக்களான ஃபத்தா அமைப்பும், ஹமாஸும் நல்லிணக்க உடன்படிக்கை ஒன்றை அறிவித்துள்ளன.

இந்த உடன்படிக்கையின்படி, 5 வாரங்களுக்குள் ஒரு ஒருமைப்பாட்டு அரசாங்கம் அமைக்கப்படும். அதன் பின்னர் 6 மாதங்களில் பொதுத்தேர்தலும், அதிபர் தேர்தலும் நடக்கும்.

இஸ்ரேலுக்கும், அதிபர் மஃமுட் அப்பாஸின் ஃபத்தா கட்சிக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த உடன்படிக்கை வந்துள்ளது.

அதிபர் அப்பாஸ் அவர்கள் இஸ்ரேலை விட, ஹமாஸுடன் சமாதானம் செய்து கொள்ளவே விரும்புகிறார் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.