விமானக் கடத்தல் அச்சத்தை ஏற்படுத்திய பயணி கைது

படத்தின் காப்புரிமை AFP
Image caption விமானம் கடத்தப்பட்டதாக வந்த முன்னைய தகவல் தவறானது

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து சென்ற விமானத்தில் 'பாதுகாப்பு உசார்நிலை' ஏற்படக் காரணமான பயணி ஒருவரை இந்தோனேசியாவின் பாலித் தீவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

முன்னதாக, விமானம் கடத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய இராணுவத்தினர் தகவல் வெளியிடவும் இந்தப் பயணியே காரணமாகியுள்ளார்.

குறித்த பயணி மதுபோதையில் இருந்ததாகவும் விமானிகளின் காக்பிட்- கட்டுப்பாட்டு அறையின் கதவை ஓங்கித் தட்டியதாகவும் அதன்பின்னர் அந்தப் பயணி மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் வர்ஜின் விமானசேவையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்தத் தகவல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டமையே விமானம் கடத்தப்பட்டதாக முன்னதாக செய்திகள் வரக்காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

விமானம் பாலியில் தரையிறங்கியபோது, விமானத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த இராணுவத்தினர் பயணிகளையும் பணியாளர்களையும் வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.