'மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க ஓராண்டு ஆகலாம்'

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மலேசிய விமானம் காணாமல்போய் 8 வாரங்கள் ஆகின்றது

காணாமல்போன மலேசிய விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்க ஓராண்டு காலம் எடுக்கலாம் என்று தேடுதல் பணிகளுக்குத் தலைமை தாங்கும் ஆஸ்திரேலிய அதிகாரி கூறியுள்ளார்.

தென் இந்து சமுத்திரத்தில் தமது அணியினர் சரியான இடத்திலேயே தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக தான் நம்புவதாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து அங்குஸ் ஹோஸ்டன் கூறியுள்ளார்.

எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணிகள் புதிய கட்டம் ஒன்றுக்குள் பிரவேசிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட் கடந்த திங்களன்று அறிவித்திருந்தார்.

கடலின் தரைப்பகுதியில் பெரும் பிரதேசம் ஒன்றை ஸ்கானிங் செய்து பார்ப்பது இந்தப் புதிய கட்டத்தில் அடங்குகிறது.

எட்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல்போன இந்த விமானத்தின் பாகங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.