ஆஸி. பிரதமரின் இந்தோனேசியப் பயணம் ஒத்திவைப்பு

படத்தின் காப்புரிமை Getty
Image caption 'இருதரப்பு உறவுகளை சீர்படுத்தும் முயற்சியாக டோனி அபொட் இந்தோனேசியா செல்லவிருந்தார்'

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் பெறும் நோக்கோடு வந்துகொண்டிருக்கின்ற இன்னொரு படகினை தேடிப்பிடித்து திருப்பியனுப்பும் முயற்சிகளில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் டோனி அபொட் இந்தோனேசியாவிற்கான பயணத்தை ஒத்திவைத்தியுள்ளார்.

டோனி அபொட் இந்தோனேசிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோவை வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கவிருந்தார்.

அந்தப் பயணத் திட்டம் மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அதிகாரபூர்வமான விளக்கம் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முன்னேற்றும் முயற்சியாக இந்தப் பயணம் பார்க்கப்படுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அதிபர் யுதோயோனோவின் தொலைபேசியை ஆஸ்திரேலிய உளவாளிகள் ஒட்டுக்கேட்டதாக கடந்த ஆண்டு வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.