சர்வதேச கண்காணிப்பாளர்கள் விடுதலை

சர்வதேச கண்காணிப்பாளர்கள் விடுதலை படத்தின் காப்புரிமை AP
Image caption சர்வதேச கண்காணிப்பாளர்கள் விடுதலை

கிழக்கு யுக்ரெய்னில் 8 நாட்களுக்கு முன்னதாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்ட 7 சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் அவர்களுடன் சென்ற 5 யுக்ரெய்னியர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் இந்த கண்காணிப்பாளர்களை தமது விருந்தினர்கள் என்று விபரித்துள்ள ஸ்லாவியான்ஸ்க் நகரில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதத் தலைவர், வியாச்சஸ்லாவ் போனோமர்யோவ் அவர்கள், அவர்களை தாம் நிபந்தனையின்றி விடுதலை செய்வதாகக் கூறியுள்ளார்.

கிழக்கு யுக்ரெய்னின் பதற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு படியாக, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ரஷ்யா மீது கடுமையான மேற்குலக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.

ரஷ்ய தூதுவரான விளாடிமீர் லுக்கின் அவர்களில் தலையீடே இந்த விடுதலைக்கு காரணம என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.