சீனப் பிரதமரின் மனைவியின் விபரங்கள்

சீனப் பிரதமரின் மனைவியின் விபரங்கள் படத்தின் காப்புரிமை BBC CHINESE
Image caption சீனப் பிரதமரின் மனைவியின் விபரங்கள்

சீனப் பிரதமர் லி கெக்கியங் அவர்களின் மனைவியான ஷெங் ஹொங் அவர்களின் புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவற்றை சீன அரச ஊடகம் முதற்தடவையாக வெளியிட்டுள்ளது.

பீஜிங்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் அவர், ஒரு இலக்கிய பேராசிரியராவார்.

பெக்கிங் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாகச் சந்தித்த இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

ஷெங் ஹொங் அவர்களின் தனிப்பட்ட விபரங்கள் டுவிட்டர் போன்ற சீன சமூக வலைத்தளம் ஒன்றில் சிறிது நேரம் பரிமாறப்பட்டது.

தனது மனைவியுடன் பிரதமர் ஆப்பிரிக்காவின் நான்கு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளுவதை முன்னிட்டு இந்த தகவல்கள் வெளியிடப்பட்டன.