மலேசியாவில் கிண்டல் காணொளிக்காக தேசத் துரோகக் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை AFP
Image caption தெரீசா கோக்

மலேசியாவில் ஒரு மூத்த எதிர்கட்சி அரசியல்வாதி மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியக் குழுக்களை கோபாவேசத்துக்கு உள்ளாக்கிய நையாண்டி காணொளி ஒன்றில் அவர் தோன்றினார் என அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையானது நாட்டில் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் ஒரு செயல் என்று, தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், ஜனநாயகக் செயல் கட்சியைச் சேர்ந்த தெரீசா கோக் கூறுகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றியினை பெற்றதன் காரணமாகவே இப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரீசா கோக் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இந்தக் காணொளியில், மலேசியாவில் நிலவும் பல அரசியல் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான கோக் கேலியாக பேசியுள்ளார். இதையடுத்து நூற்றுக்கணக்கான புகார்கள் வந்தன.

எனினும் நாட்டில் தேசத் துரோகச் சட்டத்தை ஒழிக்க பிரதமர் நஜீப் ரஜாக் உறுதியளித்துள்ளார்.