மெர்ஸ் நோய் ஒட்டகங்களினால் பரவலாம்: சௌதி எச்சரிக்கை

  • 11 மே 2014
ஒட்டகங்களைக் கையாளும்போது கையுறை சுவாச முகமூடிகள் அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை Laxman Divakar
Image caption ஒட்டகங்களைக் கையாளும்போது கையுறை சுவாச முகமூடிகள் அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமாக இருந்துள்ள மெர்ஸ் என்ற நோய்க் கிருமிக்கும் ஒட்டகங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற விதமாக அந்நாட்டின் அரசாங்கம் வலுவான எச்சரிக்கையை தற்சமயம் விடுத்துள்ளது.

ஒட்டகங்களைக் கையாளுவோர் கையுறைகளை அணிய வேண்டும் என்றும் சுவாச முகமூடிகளை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டின் விவசாயத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் இந்த வைரஸ் கிருமி ஒட்டகங்கள் மூலமாகப் பரவாம் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட இந்த நோய்க் கிருமியால் சௌதியில் இதுவரை ஐநூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.