இராக்கில் பிரிட்டிஷ் இராணுவ துஷ்பிரயோகம் குறித்து விசாரணை

இராக்கில் பிரிட்டிஷ் இராணுவ துஷ்பிரயோகம் குறித்து விசாரணை படத்தின் காப்புரிமை PA
Image caption இராக்கில் பிரிட்டிஷ் இராணுவ துஷ்பிரயோகம் குறித்து விசாரணை

பிரிட்டிஷ் இராணுவத்தினர் இராக்கில் இழைத்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்த குற்றச்சாட்டுகளைப் பற்றி த ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு பூர்வாங்க விசாரணை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறியிருக்கிறது.

இந்த நீதிமன்ற விசாரணை ஒன்றுக்கு பிரிட்டன் ஆளாவது இதுவே முதன் முறையாக இருக்கும்.

மனித உரிமை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் குழு ஒன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், பிரிட்டிஷ் இராணுவத்தினர் இராக்கில் செய்ததாகக் கூறப்படும் 400க்கும் மேற்பட்ட துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோதக் கொலைகள் என்று கூறப்படும் சம்பங்களுக்கான ஆதாரங்களைக் கொண்ட ஆவணங்களை சமர்ப்பித்ததை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது.

இந்த விசாரணையுடன் தாங்கள் ஒத்துழைக்கப்போவதாக பிரிட்டனில் இராணுவ வழக்குகளுக்கான அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ கேய்லீ கூறினார்.

ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு வழமையான, முழு விசாரணையைக் கோரும் என்ற சாத்தியக்கூறு இல்லை என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு ஏற்கனவே இராக்கில் இராணுவத்தினர் இழைத்ததாகக் கூறப்படும் துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரணைகளை நடத்திக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.