இரானிய நடிகையின் முத்தத்தால் சர்ச்சை

இரானிய நடிகையின் முத்ததால் சர்ச்சை படத்தின் காப்புரிமை AFP
Image caption இரானிய நடிகையின் முத்ததால் சர்ச்சை

பிரான்ஸின் பிரபலமான கான் திரைப்பட விழாவில் இரானிய நடிகை ஒருவர் கொடுத்த முத்தம் இரானில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இரானிய நடிகையான லெய்லா ஹடாமி அவர்கள், விழாவுக்கு வந்தபோது, அந்த விழாக்குழு தலைவரான கில்ஸ் ஜேகப் அவர்களை பார்த்து குசலம் விசாரித்து பேசியபோது அவருக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்.

இந்த முத்தமே இரானில் சர்ச்சையை கிளறியுள்ளது.

சர்வதேச விழாக்களில் கலந்துகொள்பவர்கள், இரானிய பெண்களின் மரியாதையை குறைக்காமல் நடக்க வேண்டும் என்று இரானிய துணை கலாச்சார அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், இணையத்தில் இது குறித்து கருத்துக் கூறிய பல இரானியர்கள், அந்த நடிகைக்கு சாதகமாக கருத்து வெளியிட்டதுடன், அரசாங்கம் அவரை மிரட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மணமுறிவை மையக் கதையாகக் கொண்ட இரானிய படம் ஒன்றில் நடித்ததற்காக லெய்லா ஹடாமி அவர்கள் பிரபலமானார்.

அந்தப் படத்துக்கு 2012ஆம் ஆண்டில், சிறந்த வெளிநாட்டுப்படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.