தாய்லாந்து: மூத்த அரசியல் தலைவர்கள் இராணுவ மையத்தில் சமூகமளிப்பு

தாய்லாந்தில் அரசாங்கத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். படத்தின் காப்புரிமை AP
Image caption தாய்லாந்தில் அரசாங்கத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினாவத்ர உட்பட மூத்த அரசியல் தலைவர்கள் நூற்றுக்கும் அதிகமானோரை பாங்காக்கில் உள்ள ஒரு இராணுவ மையத்துக்கு வரச்சொல்லி தாய்லாந்து இராணுவம் அழைப்பாணை விடுத்துள்ளது.

செல்வி யிங்லக் அந்த மையத்துக்கு சென்று சமூகமளித்துவிட்டு பின்னர் இராணுவத்துக்கு சொந்தமான வேறொரு இடத்துக்கு சென்றுள்ளார்.

அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

வேறு சில மூத்த அரசியல் தலைவர்களும் இராணுவ மையத்தில் சமூகமளித்திருந்தனர்.

அவர்கள் அனைவருமே நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் நடந்துள்ள இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் தலைவரான ஜெனரல் பிரயுத் சன் ஓச்சா பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வெள்ளிக்கிழமை பின்னேரம் நாட்டின் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்ஜை பிரயுத் சன் ஓச்சா சந்திப்பார் என்று கருதப்படுகிறது.