சொமாலிய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலில் குறைந்தது 10 பேர் பலி - காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குறிப்பு: இந்த காணொளியில் ஒலி வர்ணனை இல்லை.

சொமாலிய நாடாளுமன்றத்தில் நடந்துவரும் ஒரு தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெரிய பெரிய ஆயுதங்களை ஏந்திவந்வர்கள் வாயிற்கதவை வெடிவைத்து தகர்த்துவிட்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் அதிரடியாக நுழைந்திருந்தனர் என்று சம்பவத்தைக் கண்டவர்கள் கூறுகின்றனர்.

தாக்குதல் ஆரம்பித்த நேரத்தில் விவாதித்துக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பேர் அரசியல்வாதிகள் என்று கருதப்படுகிறது.

சண்டை நீடித்துவருவதாகவும், அருகிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மேற்கூரையிலிருந்தபடி தாக்குதலாளிகள் சுட்டு வருகிறார்கள் என்றும் பிபிசியிடம் பேசிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

ஆப்பிரிக்க ஒன்றிய துருப்பினரும் சொமாலிய தேசியப் படையினரும் தாக்குதலாளிகளுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அல்கைதாவுடன் தொடர்புடைய அமைப்பான அல்ஷபாப் இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது.