அமெரிக்க மின் நிலையங்களுக்கு கரிம வெளியேற்ற கட்டுப்பாடு

அமெரிக்க அதிபர் ஒபாமா படத்தின் காப்புரிமை Getty
Image caption அமெரிக்க அதிபர் ஒபாமா

புவி வெப்பமாவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் மின் உற்பத்தி நிலையங்கள் வெளியேற்றும் மாசின் அளவை பெரிய அளவில் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து ஒபாமா நிர்வாகம் விவரம் அளிக்கவுள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகள் மாகாணங்களுக்கு நிர்ணயிக்கப்படும்.

நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்களை மூடி அந்த இலக்கை எட்டுவதா அல்லது சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத ஆதாரங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்து அந்த இலக்கை எட்டுவதா என்பது போன்ற விஷயங்களை அந்த மாகாணங்கள் முடிவுசெய்துகொள்ள வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான அதிபர் ஒபாமாவின் முயற்சிகளுடைய முக்கியப் பங்காக முன்மொழியப்படுகின்ற இந்த ஒழுங்கு விதிகள் அமையும்.

அமெரிக்காவின் தொழிற்துறைக் குழுக்களும், குடியரசுக் கட்சியினரும் இந்த திட்டங்களை கடுமையாக எதிர்க்கின்றனர்.

உலகில் அதிக அளவில் வெப்பவாயுக்களை வெளியேற்றுவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ள நாடு அமெரிக்காதான்.