கிழக்கு ஐரோப்பாவில் ஒபாமா: இராணுவ பிரச்சன்னத்தை வலுப்படுத்த திட்டம்

போலந்தில் அதிபர் ஒபாமா படத்தின் காப்புரிமை Reuters
Image caption போலந்தில் அதிபர் ஒபாமாவுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

போலந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவப் பிரசன்னத்தை வலுப்படுத்துவதற்கான நூறு கோடி டாலர் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

போலந்து வந்திறங்கிய பின்னர் கருத்து வெளியிட்ட ஒபாமா, கிழக்கு ஐரோப்பாவின் பாதுகாப்பில் அமெரிக்கா அசைக்க முடியாத அக்கறையும் ஈடுபாடும் காட்டிவருவதாகக் கூறினார்.

அண்டையிலுள்ள யுக்ரெய்னில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒபாமாவின் பயணத்தில் முக்கியக் கருப்பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க படைகள் கிழக்கு ஐரோப்பாவுக்கு அனுப்பப்படுவதை கூட்டுவது மற்றும் இராணுவப் பயிற்சி நடவடிக்கைகள் அதிகரிப்பது போன்ற திட்டங்களை ஒபாமா அறிவித்துள்ளார்.

ஒபாமாவின் திட்டம் செயல்பாட்டுக்கு வர வாஷிங்டனில் உள்ள காங்கிரஸ் மன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்கையும் கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் செவ்வாயன்று பின்னேரம் ஒபாமா சந்திக்கிறார்.