எகிப்திய அதிபராக சிசி பதவியேற்றார்

எகிப்திய அதிபராக சிசி பதவியேற்றார்
Image caption எகிப்திய அதிபராக சிசி பதவியேற்றார்

எகிப்திய புதிய அதிபரான அப்தல் ஃபத்தா அல் சிசிi அவர்கள், தான் தேர்தெடுக்கப்பட்ட தேர்தலை தேசத்துக்கான ஒரு திருப்பு முனை என்று வர்ணித்துள்ளார்.

அதிகாரங்களை கையளிக்கும் ஜனநாயக வழியிலான, அமைதியான, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று தனது பதவியேற்பு வைபத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் முன்பாக அவர் பேசினார்.

எதிர்கட்சிகள் பகிஸ்கரித்த ஒரு தேர்தலில் கடந்த மாதம் சிசி அவர்கள், 97 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

இராணுவத் தளபதி என்ற வகையில், ஒரு வருடத்துக்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்லாமியவாத அதிபரான முஹமட் மோர்சி அவர்களை, இவர் ஒரு இராணுவ புரட்சி மூலம் பதவியில் இருந்து நீக்கினார்.

அன்று முதல் மோர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதன் தலைவர்கள் மீது விசாரணைகள் நடக்கின்றன.