பாகிஸ்தானில் ஷியா முஸ்லீம்கள் மீது தாக்குதல்: 23 பேர் பலி

படத்தின் காப்புரிமை AFP
Image caption தற்கொலைத் தாக்குதலில் 23 பேர் பலி ( ஆவணப்படம்)

இரானுடனான பாகிஸ்தான எல்லைப்புற நகரான டாப்டானில் ஷியா முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.

இரானிலிருந்து பாகிஸ்தான் திரும்பிக்கொண்டிருந்த ஷியா புனித யாத்ரிகர்கள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தானின் பலோச்சிஸ்தான் மாகாண அதிகாரிகள் கூறினர்.

இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.