ஸ்காட்லாந்து சுதந்திரம்: தீவிர பிரச்சாரங்கள் தொடங்கின

படத்தின் காப்புரிமை BILL FLEMING
Image caption ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்துசெல்வதை ஆதரிப்போரின் பிரச்சாரம்

ஸ்காட்லாந்து சுதந்திரம் தொடர்பான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், சுதந்திரத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் தமக்கான ஆதரவைத் திரட்டும் தீவிர பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளனர்.

ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பரோவில் இன்று கூடிய 100 பேர், சுதந்திரத்தை ஆதரிக்கும் வகையில் யெஸ் -YES (ஆம்) என்ற வார்த்தையை பிரதிபலிக்கும் வகையில் கூடிநின்றனர்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உள்ள மூன்று பிரதான அரசியல்கட்சிகளும் ஸ்காட்லாந்து தனியாக பிரிந்துசென்று சுதந்திர நாடாவதை எதிர்க்கின்றன.

ஸ்காட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்துடன் சேர்ந்தே இருக்குமானால் அப்பிராந்தியத்திற்கு மேலதிக அதிகாரங்கள் பகிரப்படும் என்றும் இந்தக் கட்சிகள் கூறுகின்றன.

அண்மைய கருத்துக்கணிப்பொன்றின் படி, இங்கிலாந்தில் 21 வீதமான மக்களே ஸ்காட்லாந்து சுதந்திரத்தை ஆதரிக்கின்றனர்.