இரானுடன் மீண்டும் தூதரக உறவு: பிரிட்டன் முடிவு

படத்தின் காப்புரிமை AFP
Image caption இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹமது ஜாவத் ஸரிப்புடன் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் ஹேக் ( ஆவணப் படம்)

இரானிய தலைநகர் தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகத்தை துவக்கவிருப்பதாக பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான ஏற்பாடுகள் முடிவடைந்த உடன் இந்த தூதரகம் செயற்படத்துவங்கும் என்றும் இந்த தூதரகத்தை அங்கே துவக்குவதற்கு ஏதுவான சூழல் உருவாகியிருப்பதாகவும் ஹேக் தெரிவித்திருக்கிறார்.

இராக்கில் மும்முரமாகியிருக்கும் சுன்னி ஆயுதக்கிளர்ச்சியை கையாள்வது எப்படி என்பது தொடர்பிலான மேற்குலக நாடுகளின் தீவிர பரிசீலனைக்கு மத்தியில் இரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான உறவை சீரமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இந்த அறிவிப்பு இரானுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான உறவு மேம்படுவதற்கான மற்றொரு சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு பிரிட்டன் இரானுடனான தனது ராஜாங்க உறவை முற்று முழுதாக துண்டித்துக்கொண்டது