மலேசியா கடற்பரப்பில் படகு விபத்தில் 40 பேர் பலி?

Image caption படகு கவிழ்ந்த பேண்டிங் நகருக்கருகான பிரதேசத்தைக் காட்டும் படம்

சுமார் 100 இந்தோனேசியர்களை ஏற்றி வந்த படகு ஒன்று, மலேசிய கடற்கரையோரத்தில் கவிழ்ந்ததில் இதுவரை 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அந்த படகில் பயணித்தவர்கள், சட்டவிரோதமாக மலேசியாவை அடைய முயன்றவர்கள் என்று தாங்கள் சந்தேகிப்பதாக மலேசிய கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுவரை 55 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், உயிர் பிழைத்தவர்களை தேடும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து வந்துக்கொண்டிருந்த அந்த படகு, மலாக்கா ஜலசந்தியில், பேண்டிங் என்ற கடற்கரை நகரத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் மூழ்கியது.