இராக்: தமது பலத்தைக் காட்ட அணிவகுக்கும் ஷியா குழுக்கள்

படத்தின் காப்புரிமை AP
Image caption 'ஷியா குழுக்களின் ஆயுத அணிவகுப்பு தலைநகரில் வாழும் சிறுபான்மை சுனி மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும்'

இராக் தலைநகர் பாக்தாத்திலும் மற்றபல நகரங்களிலும் ஆயுதம் ஏந்திய ஆயிரக்கணக்கான ஷியா ஆயுதக்குழு உறுப்பினர்கள் அணிவகுத்து காட்சிப்படுத்தியுள்ளனர்.

வடக்கு இராக்கில் பெரும்பகுதியை கைப்பற்றிள்ள சுனி ஆயுததாரிகளுக்கு எதிராக தமது பலத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த அணிவகுப்பு நடந்துள்ளது.

கடும்போக்கு ஷியா மதபோதகரான மொக்தாடா அல் சதருக்கு ஆதரவான ஆயுதக்குழுவினர், சுனி ஆயுதக்குழுவை ஒடுக்குவதற்கு அமெரிக்கப் படையை வரவழைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மொக்தாடா அல் சதரின் ஆதரவாளர்கள் கடந்த காலங்களில் மதக்குழு வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இப்போது ஷியா குழுக்களின் ஆயுத பலத்தை வெளிப்படுத்தும் புதிய அணிவகுப்புகள் தலைநகரில் வாழும் சுனி சிறுபான்மை மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தும் என்று பாக்தாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.