எகிப்தின் ரமலான் புனித மாத வெளிச்சக் கூடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எகிப்தின் ரமலான் புனித மாத வெளிச்சக் கூடு - காணொளி

ரமலான் மாதம் ஆரம்பமாகும் நிலையில், அதனை முன்னிட்டு எகிப்தில் சில சிறப்பு சடங்குகள் அனுட்டிக்கப்படுகின்றன.

இதற்காக எகிப்திய மக்கள் ஃபனூஸ் என்று அழைக்கப்படுகின்ற, கையால் செய்யப்பட்ட வெளிச்சக் கூடுகளை வாங்குவார்கள்.

இந்த வெளிச்சக் கூடுகளை செய்வதற்கான பாரம்பரியம் அந்த நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பமானது. ஆனால், அந்த தொழில் துறை இன்று சிரமத்தில் இருக்கிறது.

உள்ளூர் தயாரிப்பான வெளிச்சக்கூடுகளுடன் போட்டி போடுவதற்காக சீனாவில் இருந்து புதிய வெளிச்சக்கூடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த பாரம்பரியம் குறித்து கெய்ரோவில் இருந்து பிபிசியின் சல்லி நபீல் அனுப்பிய காணொளி.