ஐசிஸ் தலைவர் அல் பக்தாதியின் அறைகூவல்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐசிஸ் தலைவர் அல் பக்தாதியின் அறைகூவல் - காணொளி

உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு பழிவாங்குமாறு, இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ஐசிஸ் அமைப்பின் தலைவர் தனது போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை ஐசிஸ் அமைப்பு கைப்பற்றிய பின்னர் முதல் தடவையாக பேசிய அபு பக்கர் அல் பக்தாதி அவர்கள், ஒரு இஸ்லாமிய அரசை கட்டியெழுப்ப முஸ்லிம்கள் அனைவரும் வந்து உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த மாதம் நடந்த இந்தச் சண்டை, 2500 க்கும் அதிகமான இராக்கியர்களின் உயிரை பலிவாங்கியுள்ளதாக ஐநா கூறியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் அந்த நாட்டின் மிகவும் மோசமான உயிர்ப்பலி நடந்த மாதம் இதுதான் என்றும் அது கூறியுள்ளது.

இவை குறித்து பாக்தாதில் இருந்து பிபிசியின் மத்திய கிழக்கு ஆசிரியர் ஜெரிமி போவன் அவர்கள் அனுப்பிய காணொளி.