போஸ்னிய யுத்த காலத்து படுகொலைகள்: "நெதர்லாந்து அரசாங்கத்துக்கும் பொறுப்பு உண்டு"

நீதிமன்றத்தின் தீர்ப்பை  கொல்லப்பட்டோரின் உறவினர்கள் வரவேற்றனர் படத்தின் காப்புரிமை AFP
Image caption நீதிமன்றத்தின் தீர்ப்பை கொல்லப்பட்டோரின் உறவினர்கள் வரவேற்றனர்

90களில் போஸ்னிய யுத்தத்தின்போது ஸ்ரெப்ரனீச்சாவில் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்களின் படுகொலைக்கு நெதர்லாந்து அரசாங்கம் பொறுப்பு என நெதர்லாந்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஸ்ரெப்ரனிட்சாவின் தாய்மார்கள் என்ற பெயர்கொண்ட பெண்கள் அமைப்பினர், தங்களுடைய் குடும்பத்து ஆண்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டதென குற்றம்சாட்டி தொடுத்த வழக்கில் இந்த முடிவு வந்துள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அந்த யுத்தத்தின்போது ஸ்ரெப்ரனிட்சாவிற்கு சற்று வெளியே அமைக்கப்பட்டிருந்த ஐநாவின் முகாமில் தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கான ஆடவர்களையும், சிறுவர்களையும் அமைதிகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டச்சுப் படையினர் போஸ்னிய இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தனர்.

பின்னர் இந்த போஸ்னிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் அதிகம் பேர் ஒட்டுமொத்தமாக செய்யப்பட்ட இனப்படுகொலை சம்பவம் இதுவென்று கருதப்படுகிறது.