அல்ஜீரிய விமானத்துடனான தொடர்பு துண்டிப்பு

படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption அல்ஜீரிய விமானத்துடனான தொடர்பு துண்டிப்பு

அல்ஜீரியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அல்ஜெரி, மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்கினா ஃபாஸோவிலிருந்து கிளம்பிய தன் விமானம் ஒன்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஓவுவாககடகோவிருந்து கிளம்பிய 50 நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக விமான நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல்ஜீரியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் அல்ஜியர்சிற்குச் சென்று கொண்டிருந்தது.

ஏஎச்5017 என்ற இந்த விமானத்தில் 110 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்