பின்புறத்தை எடுப்பாக்கிக்கொள்ள பெண்கள் சிலர் அறுவை சிகிச்சையை நாடுகின்றனர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பின்னழகை எடுப்பாக்க முயன்று போலி டாக்டர்களால் பின்னாளில் பெண்கள் படும்பாடு

பின்னழகை எடுப்பாக்கிக்கொள்வதற்காக அறுவை சிகிச்சைகளை நாடும் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.

ஆனால் இப்படியான சிகிச்சைகளை முறையாக செய்வதற்கு பல்லாயிரம் டாலர்கள் செலவாகிறது.

இதன் காரணமாக மலிவு விலையில் இச்சிகிச்சைகளை செய்து தருகிறோம் எனக் கூறி மக்களை ஏமாற்றும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மருந்து என்று சொல்லி, மரம் ஒட்டும் பசை, டயர் ஒட்டும் பசை போன்றவற்றை பெண்களின் புட்டங்களில் ஊசி மூலம் இவர்கள் செலுத்திவிடுகின்றனர்.

மயாமியிலிருந்து ரஜினி வைத்தியநாதன் தயாரித்து அனுப்பிய காணொளியின் தமிழ் வடிவம் இது.