துண்டித்த தலையை தூக்கிப்பிடித்த ஆஸி. பையன்: 'காட்டு மிராண்டித் தனம்'

படத்தின் காப்புரிமை Getty
Image caption பிரதமர் டொனி அபொட்

சிரியாவின் அரசாங்க படைச் சிப்பாய் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலையை, ஆஸ்திரேலியர் ஒருவரின் மகன் என்று நம்பப்படும் சிறுவன் ஒருவன் தூக்கிப் பிடித்திருப்பதைக் காட்டுகின்ற படத்தை பிரதமர் டொனி அபொட் 'காட்டுமிராண்டித் தனமானது' என்று கண்டித்துள்ளார்.

படத்தை வெளியிட்ட நபர் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவராவார்.

சிரியாவில் ஐஎஸ் போராளிகளுடன் இணைவதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் தண்டனைக் காலம் அனுபவித்துள்ள காலித் ஷாரொஃப் என்பவரே (சிறுவனின் தந்தை) இந்தப் படத்தை டுவிட்டர் தளத்தில்

வெளியிட்டுள்ளதாக படத்தை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய செய்திப் பத்திரிகை கூறியுள்ளது.

இந்தப் படம் தொடர்பில் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சமூகத் தலைவர்களும் அதிர்ச்சியும் அருவருப்பும் வெளியிட்டுள்ளனர்.

ஐஎஸ் இயக்கத்தினரின் இழிவான கொடூர முகத்தையே இந்தப் படம் காட்டுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் கூறியுள்ளார்.