இராக், சிரியாவைச் சேர்ந்த 4500 பேருக்கு ஆஸி.யில் தஞ்சம்

படத்தின் காப்புரிமை AFP
Image caption 'படகுகளை நிறுத்துவதில் ஆஸ்திரேலியா வெற்றியடைந்துள்ளதால் 4500 பேருக்கு வாய்ப்பு'

இராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4500 பேரை தமது நாட்டில் மீளக்குடியமர்த்த முன்வந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை அமைச்சர் ஸ்காட் மாரிஸன் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் உள்வாங்கும் அகதிகள் எண்ணிக்கையின் பகுதியாக இவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

தஞ்சம்கோரி வரும் படகுகளை தடுத்து நிறுத்துவதில் அரசாங்கம் கண்டிருக்கின்ற வெற்றி காரணமாக இந்த 4500 பேருக்கும் இடம் கிடைத்துள்ளதாக ஸ்காட் மாரிஸன் கூறினார்.

சட்டவிரோத படகுகள் மூலம் வருவோருக்கு ஆஸ்திரேலியா தஞ்சமளிக்காது என்று ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.