காங்கோவில் எபோலா நோயக்கு 31 பேர் பலி

காங்கோவில் உள்ள சகாதாரப் பணியாளர்கள்
Image caption காங்கோவில் உள்ள சகாதாரப் பணியாளர்கள்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் 31 பேர் எபோலா நோய் தாக்குதலால் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் எபோலா தொற்றுடன் இது தொடர்புடையதல்ல. கடந்த மாதத் துவக்கத்தில் தலைநகர் கின்காசாவுக்கு வடக்கே இந்த நோய் தொற்று முதலில் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அந்தப் பகுதியில் உள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேநேரம், எபோலா நோய் தொற்று காரணமாக, மேற்கு ஆப்பிரிக்காவில் பயிர் சாகுபடி பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு அமைப்பு எச்சரித்துள்ளது. இதன் காரணமாக உணவுப் பொருள் தட்டுப்பாடும் விலையேற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எபோலா நோய் தாக்குதலுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிடுகின்றனர். இந்த நோயை குணப்படுத்தக் கூடிய மருந்தை தயாரிப்பதற்கான சோதனைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.