பாகிஸ்தானில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைகிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தானில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைகிறது - காணொளி

பாகிஸ்தானில் வெள்ளப்பகுதியில் நீரில் அழுத்ததை குறைக்கவும், நகரப் பகுதிகளைக் காக்கவுமாக அங்குள்ள ஒரு கேந்திர முக்கியத்துவம் மிக்க அணையை அதிகாரிகள் உடைத்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வெள்ள நீர் இந்திய காஷ்மீர் பகுதியில் இருந்துதான் பாகிஸ்தானுக்குள் புகுந்துள்ளது.

இந்தியப் பகுதிகளில் தற்போது வெள்ளம் வடிந்து வருகின்றது.

குடிபெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் வெளியேற முற்பட்டதால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெள்ள நிலைமை குறித்த பிபிசியின் ஒரு காணொளி.