செய்திகள்... வாசிப்பது வௌவால்!

சிவ பூஜையில் கரடி புகுந்ததைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், தொலைக்காட்சி செய்திக் கலையரங்கத்தில் வௌவால் புகுந்தால் என்னாகும்?

இந்த வீடியோவில் பாருங்கள்.

அமெரிக்க தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் செய்திக் கலையரங்கத்தில் விடியற்காலை நிகழ்ச்சி ஒன்றில், அழையாத விருந்தாளியாய் வௌவால் வந்து குட்மார்னிங் சொல்ல செய்தி வாசிப்பாளர்கள் திகைத்துச் சிரித்தனர்.

பின்னர் அந்த வவ்வாலைப் பிடித்து பத்திரமாக வெளியில் பறக்கவிட்டார்கள் தொலைக்காட்சி ஊழியர்கள்.

குறிப்பு: இந்த வீடியோவில் ஒலி வர்ணனை இல்லை.