ஸ்காட்லாந்து மக்கள் கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள்: பிரிட்டிஷ் அரசி

பிரிட்டிஷ் மகாரானி எலிசபெத் படத்தின் காப்புரிமை
Image caption பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்

ஐக்கிய ராஜ்ஜியத்திடமிருந்து ஸ்காட்லாந்து பிரிந்துபோவது பற்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பற்றி பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் முதல் முறையாக தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

மக்கள் வியாழக்கிழமை தங்கள் வாக்குகளை போடும் போது எதிர்காலத்தைப் பற்றி கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.

அவரது கருத்துக்கள் ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கு எதிரானவர்களுக்கு ஆதரவானதாக அவர்களால் கூறிக்கொள்ளப்படலாம் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பக்கிங்காம் அரண்மனை அதிகாரிகளோ இந்த கருத்துக்கள், அரசி, பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின்படி வகிக்கும் பக்கசார்பற்ற நிலையை மீறவில்லை என்று கூறுகிறார்கள்.

பிரிட்டிஷ் அரசி எலிசபத் இந்தக் கருத்துக்களை ஸ்காட்லாந்தில் உள்ள அவரது பால்மோரால் எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள க்ரேத்தி தேவாலயத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவரிடம் பேசும்போது தெரிவித்தார்.