'சுதந்திர கனவை மாற்ற முடியாது' - யுக்ரெய்னிய போராளி

அண்ட்ரே புர்கின் படத்தின் காப்புரிமை EPA
Image caption அண்ட்ரே புர்கின்

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் வசம் இருக்கும் மக்கள் குடியரசுகளுக்கு சுயாட்சி வழங்குவதற்கான புதிய சட்டம் சுதந்திரத்துக்கான தமது வேட்கையை மாற்றாது என்று கிழக்கு யுக்ரெய்னில் இருக்கும் கிளர்ச்சிக்குழு தலைவர் கூறியுள்ளார்.

ஆனாலும், அந்தச் சட்டத்தில் பல சாதகமான அம்சங்கள் இருப்பதாகவும், சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு அடிப்படையாக அதனைக் கொள்ள முடியும் என்றும் டொனெட்ஸ்க் மக்கள் குடியரசை சேர்ந்த அண்ட்ரே புர்கின் கூறியுள்ளார்.

யுக்ரெய்னிய நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அந்தச் சட்டத்தில் கிளர்ச்சிக்காரர்கள் சிலருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அம்சங்களும் இருக்கின்றன. ஆனால், பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் அதில் அடங்கமாட்டார்கள்.

அந்தப் பிராந்தியத்தில் கடந்த 5 மாதங்களாக நடக்கும் மோதல்களுக்கு முடிவு காணும் வகையில் ஒரு மோதல் நிறுத்தத்தை கொண்டுவரும் நோக்கமாகவே இந்த நகர்வுகள் வந்துள்ளன.