பாகிஸ்தான் : மதநிந்தனைக் கைதி மீது துப்பாக்கிச் சூடு

மதநிந்தனை செய்பவர்கள், கொல்லப்படவோ அல்லது தாக்கப்படவோ கூடிய ஆபத்து பாகிஸ்தானில்  உள்ளது. படத்தின் காப்புரிமை AFP
Image caption மதநிந்தனை செய்பவர்கள், கொல்லப்படவோ அல்லது தாக்கப்படவோ கூடிய ஆபத்து பாகிஸ்தானில் உள்ளது

பாகிஸ்தானிய சிறை ஒன்றில் 70 வயதான கைதி ஒருவர் போலிஸ்காரர் ஒருவரால் சுடப்பட்டு, கடுமையான காயமடைந்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் இருந்து வந்த முஹம்மட் அஸ்கர் என்னும் இந்தக் கைதிக்கு, மத நிந்தனை செய்ததாக குற்றங்காணப்பட்டு, இவ்வருட முற்பகுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

தன்னை ஒரு இறைதூதராகக் கூறிக்கொண்டு இவர் எழுதிய கடிதங்கள் இஸ்லாத்தை அவமதித்ததாக கருதப்பட்டது.

இவருக்கு உளநலக் கோளாறு இருக்கிறது என்பதற்கு நன்றாக ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருப்பதாக இவரது சட்டத்தரணி கூறுகிறார்.

மத நிந்தனை என்பது பாகிஸ்தானில் மிகவும் உணர்வைத் தூண்டக் கூடிய விசயமாக இருப்பதுடன், அதனை செய்பவர்கள், கொல்லப்படவோ அல்லது தாக்கப்படவோ கூடிய ஆபத்தும் அங்கு உள்ளது.