ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளி: சைப்ரஸ் கடலில் தத்தளித்த சிரிய அகதிகள்

சிரியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெடித்த மோதல்களைத் தொடர்ந்து அங்கிருந்து மில்லியன் கணக்கான அகதிகள் வெளியேறியுள்ளனர்.

சைப்ரஸின் பாப்போஸ் சுற்றுலா மையத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் ட்ரோலர் படகு ஒன்றிலிருந்து 345 அகதிகள் கடந்த வியாழன்று மீட்கப்பட்டனர்.

இவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவரும் 52 சிறார்களும் உள்ளனர்.

தம்மைக் காப்பாற்றிய கப்பலிலிருந்து பெரும்பாலான குடியேறிகள் இறங்கமறுக்கும் நிலையில், லிமாசொல்லில் கப்பல் நங்கூரமிட்டுள்ளது.

இத்தாலிக்கு கொண்டுசெல்லுமாறு அவர்கள் கேட்டுவருகின்றனர். குடியேறிகளின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கமறுத்துவிட்டனர்.

மீட்புப் பணியிலேயே பெருந்தொகை பணம் செலவிடப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனம் கூறுகின்றது.

சொந்த நாட்டிலிருந்து தொலைதூரம் கடந்துவந்துள்ள இந்த மக்களின் பயணம் இன்னும் முடியவில்லை. என்றாலும் இந்தளவு தூரமாவது இவர்களால் பாதுகாப்பாக வந்துசேர முடிந்துள்ளது.