ஜப்பானிய எரிமலை வெடிப்பில் 30க்கும் அதிகமானோர் பலி

ஜப்பானிய எரிமலை வெடிப்பில் 30க்கும் அதிகமானோர் பலி படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஜப்பானிய எரிமலை வெடிப்பில் 30க்கும் அதிகமானோர் பலி

ஜப்பானில் சனிக்கிழமையன்று எரிமலை ஒன்று திடீரென வெடித்து சிதறி, அதற்கு அருகில் நூற்றுக்கணக்கான மலையேறிகள் அகப்பட்டுக் கொண்டதில், 30 க்கும் அதிகமானோர் இறந்துவிட்டதாக இப்போது நம்பப்படுகின்றது.

மீட்புப் பணியாளர்கள், ஒண்டாகே எரிமலை உச்சிக்கு அருகே சடலங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள், ஆனால், அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை.

சுமார் 40 பேர் காயமடைந்திருக்கிறார்கள். பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி எரிமலை திடிரென பாறைச் சிதறல்களையும், சாம்பலையும் விசிறியடித்தபோது அங்கிருந்து நூற்றுக்கும் அதிகமான மலையேறிகள் ஒருவாறு தப்பித்து வந்துவிட்டார்கள்.

சிலரை இராணுவ ஹெலிக்கொப்டர்கள் மீட்டிருக்கின்றன.