ஆலன் ஹென்னிங் “இஸ்லாமிய அரசால் கொல்லப்பட்டார்”

  • 4 அக்டோபர் 2014
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்ட அலன் ஹென்னிங் படத்தின் காப்புரிமை Reuters
Image caption இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் தலைவெட்டிக் கொல்லப்பட்ட அலன் ஹென்னிங்

இஸ்லாமிய அரசு என்கிற தீவிரவாதிகளால் பிணைக்கைதியாக பிடித்துச்செல்லப்பட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் ஹென்னிங் சிரச்சேதம் செய்து கொல்லப்படுவதைக்காட்டுவதாகக் கூறப்படும் காணொளி ஒன்றை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் இருக்கும் சால்பர்ட் பகுதியைச் சேர்ந்த இந்த காரோட்டி சிரியாவுக்கு உதவிப்பொருட்களைக் கொண்டுசென்றிருந்தபோது கடந்த டிசம்பர் மாதம் இஸ்லாமிய அரசு அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டு பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு முன்பாக தங்களிடம் பிடிபட்டிருந்த மற்றொரு பிரிட்டிஷ் பிணைக்கைதியான டேவிட் ஹெய்ன்ஸை கொலை செய்யும் காணொளியை கடந்தமாதம் வெளியிட்டிருந்த இஸ்லாமிய அரசு அமைப்பு, அந்த காணொளியில் இவரையும் தாங்கள் கொல்லப்போவதாக எச்சரித்திருந்தது.

இந்த காணொளியில் அமெரிக்க தொண்டு நிறுவன உதவிப்பணியாளர் பீட்டர் காசிக்கை கொல்லப்போவதாக இஸ்லாமிய அரசு அமைப்பு எச்சரித்திருக்கிறது.

“இந்த கொலைகாரர்களை தேடிப்பிடித்து சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவை அனைத்தையும் பிரிட்டன் செய்யும் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்திருக்கிறார்.