வடக்கு - தெற்கு கொரியாக்கள் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கும் - காணொளி

வடக்கு - தெற்கு கொரியாக்கள் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்கும் - காணொளி

வடக்கு மற்றும் தெற்கு கொரியாக்கள் கடந்த பெப்ரவரியில் தடைப்பட்டுப் போன உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க உடன்பட்டுள்ளதாக தென்கொரியாவில் இருந்து வரும் செய்திக்ள் கூறுகின்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக திடீர் விஜயமாக வட கொரியாவின் உயர் அதிகாரிகள் தென்கொரியாவுக்கு வந்த்தை அடுத்து இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது.

வடகொரிய தலைவரான கிம் ஜொங் உண் அவர்களின் மிகவு நெருங்கிய இரு சகாக்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

அடுத்த சிலவாரங்களில் மீண்டும் சந்திப்பதற்கு இரு தரப்பும் உடன்பட்டுள்ளது.

வடகொரியாவில் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படும், Hwang Pyong-so அவர்கள் தென்கொரியாவின் ஒருமைப்பாட்டு அமைச்சர் Ryoo Kihl-jae அவர்களுடன் பேச்சு நடத்தினார்.

இன்சென்னில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இவை குறித்த ஒரு காணொளி.