மெக்ஸிகோ: மனிதப் புதைகுழி சடலங்கள் காணாமல்போன மாணவர்களா?

மெக்ஸிகோவின் ஓர் மத்திய நகரமான இகுவாலாவில் பலர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டதாகத் தெரியும் மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவ்வூருக்கு மத்திய புலனாய்வு அதிகாரிகள் செல்கின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

சென்றவாரம் பொலிசாருடன் மோதிய பின்னர் காணாமல்போயிருந்த 43 மாணவர்களின் உடல்களா இவை என்பதை தடயவியல் நிபுணர்கள் பரிசீலிப்பார்கள்.

வேலைவாய்ப்பில் பாரபட்சம் காட்டப்படுவது சம்பந்தமான ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக இந்த மாணவர்கள் இகுவாலாவுக்கு சென்றிருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தின்போது பொலிசார் துப்பாக்கிசூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.

காணாமல்போயிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிற்பாடு பொலிஸ் வேன்களில் குண்டுக்கட்டாக தூக்கிச்செல்லப்படுவதை சாட்சிகள் கண்டிருந்தனர்.

இந்த துப்பாக்கிசூடு சம்பந்தமாக 22 பொலிஸ்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.