'சகிக்க முடியாத தார்மீகச் சுமைகள் குடும்பங்களுக்கு வேண்டாம்' - பாப்பரசர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'சகிக்க முடியாத தார்மீகச் சுமைகள் குடும்பங்களுக்கு வேண்டாம்' - பாப்பரசர்

சகிக்கமுடியாத தார்மீகச் சுமைகளை கத்தோலிக்க மக்கள் மீது சுமத்த வேண்டாம் என்று பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்கள், றோமன் கத்தோலிக்க ஆயர்களைக் கேட்டிருக்கிறார்.

குடும்ப வாழ்க்கை குறித்து ஆராய்வதற்காக வத்திக்கானில் நடக்கும் இரு வாரகால உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு, ஒருபால் உறவு மற்றும் மணமுறிவு ஆகியவை போன்ற விடயங்களில் கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் சர்ச்சைக்குரிய போதனைகள் பற்றி இந்த கூட்டம் ஆராயும்.

கத்தோலிக்க கொள்கைகளில் மாற்றங்களை எதிர்க்கும் பழமைவாதிகள் வத்திக்கானில் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், இங்கு விவாதிக்கப்படும் விடயங்கள் குறித்து முரணான கருத்துக்கள் இருக்கும் என்று ரோமுக்கான பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாடுகள் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை என்பதால், தற்போதைய நவீன உலகின் தேவைகளுடன் ஒப்பிடும் போது அவை எதிர்கொள்கின்ற சவால்களே இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வத்திக்கான் திருச்சபையை தூண்டியுள்ளது என்கிறார் அமெரிக்காவின் சலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் சமாதான கற்கைகள் பீடத்தின் தலைவரான பேராசிரியர் கீதபொன்கலன்.

அவரது செவ்வியை இங்கு கேட்கலாம்.