வளர்முக நாடுகளில் ஆசிரியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும்: ஐநா

Image caption உலக ஆசிரியர் தினம் இன்று அக்டோபர் 6-ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சனை மேலும் மோசமடையும் அபாயம் இருப்பதாக ஐநா அறிக்கை ஒன்று கூறுகின்றது.

உலகில் பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற படியாலேயே, ஐநாவிடமிருந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை வழங்குவதற்கான ஐநாவின் மிலேனிய இலக்கு அடுத்த ஆண்டுக்குள் அடையப்பட வேண்டுமானால், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மேலும் 4 மில்லியன் பேர் தேவைப்படுவதாக யுனெஸ்கோ கூறியுள்ளது.

அங்கோலா, தெற்கு சூடான், செனகல் உள்ளிட்ட நாடுகள் ஆசிரியர் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு தகுதி பெறாத ஆசிரியர்களையே பயன்படுத்துகின்றன.

நைஜீரியா, 2020ம் ஆண்டுக்குள் அங்குள்ள எல்லா பிள்ளைகளுக்கும் கல்வியறிவு ஊட்டுவதற்கு மேலதிகமாக 1.8 பிலியன் டாலர்கள் தேவைப்படுவதாகவும் ஐநா அறிக்கை கூறியுள்ளது.