இபோலா : சியராலியோன் செல்லும் 750 பிரிட்டிஷ் படையினர்

இபோலா : சியராலியோன் செல்லும் 750 பிரிட்டிஷ் படையினர் படத்தின் காப்புரிமை Press Association
Image caption இபோலா : சியராலியோன் செல்லும் 750 பிரிட்டிஷ் படையினர்

இபோலா பரவலைக் கையாள சியாராலியோனுக்கு பிரிட்டன் 750 படையினரை அனுப்புகிறது.

ஒரு கப்பலையும், 3 ஹெலிக்கொப்டர்களையும் அது அனுப்புகிறது.

சிகிச்சை நிலையங்களை அமைக்கவும், சுகாதார பராமரிப்பு பணியாளர்களை பயிற்றுவிப்பதற்கான வசதிகளைச் செய்யவும் இந்தப் படையினர் உதவுவார்கள்.

சியராலியோனில் இபோலா நோய்ப் பரவல் கட்டுப்பாட்டில் இல்லை என்று அங்கு செயற்படும் எம் எஸ் எஃப் அமைப்பின் தலைவி கிறிஸ்டினா ஃபல்கோன் கூறியுள்ளார்.

சியராலியோனுக்கு, களத்தில் செயற்பட மேலும் ஆட்கள் தேவை என்றும், மேலும் போக்குவரத்தும், மேலும் வசதிகளும், மேலும் படுக்கைகளும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை இபோலாவால் பலியான 3000 பேரில் அநேகமாக எல்லாரும், சியராலியோனிலும், அருகே லைபீரியா மற்றும் கினியாவிலும்தான் இறந்துள்ளனர்.