இஸ்லாமிய அரசுக்கு எதிரான பலவீனக் கூட்டணி - காணொளி

இஸ்லாமிய அரசுக்கு எதிரான பலவீனக் கூட்டணி - காணொளி

துருக்கியில் குர்து இன போராட்டக்காரர்களுக்கும், போலிஸாருக்கும் இடையிலான மோதல்களில் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

துருக்கியில் எல்லையில் சிரியாவில் உள்ள கொபானி நகரை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்ற துருக்கிய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிருப்தியுற்ற மக்களே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

துருக்கியின் தென்கிழக்கு பகுதிகளில் குர்து இனமக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் அதிகமாக இருந்தன.

இந்த விடயத்தில் துருக்கி தயங்குவதற்கு, தமது உள்ளூர் குர்துக்களுடன் அவர்களுக்கு இருக்கும் வரலாற்று பதற்றமும் ஒரு காரணமாகும். சிரியாவின் உள்நாட்டு மோதலில் சிரியாவின் பரந்துபட்ட எதிர்க்கட்சிக்கு, சர்வதேச கூட்டணி மேலும் அதிகம் உதவ வேண்டும் என்றும் அது எதிர்பார்க்கிறது.

சிரியாவில் இருந்து வரும் அகதிகளால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க, அகதிகளுக்கான பாதுகாப்பான ஒரு இடத்தையும் சர்வதேச சமூகத்திடம் துருக்கி எதிர்பார்க்கிறது.

ஆனால், துருக்கிய படைகள் இந்த மோதலை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது என்பது, அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவை பாதிப்பதுடன், இஸ்லாமிய அரசுக்கு எதிரான கூட்டணி என்பது எந்த அளவுக்கு குழப்பமானதாகவும், பலவீனமானதாகவும் இருக்கிறது என்பதையும் கோடிகாட்டுகிறது.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.