அமைதிக்கான நோபல் பரிசு மலாலா மற்றும் கைலாஷ் ஆகியோருக்கு

படத்தின் காப்புரிமை Getty
Image caption கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலா யூஸஃப்சாய்

2014-ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசினை பாகிஸ்தானிய சிறார் கல்விச் செயற்பாட்டாளர் மலாலா யூஸஃப்சாய் மற்றும் இந்திய சிறார் உரிமைச் செயற்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் வென்றுள்ளனர்.

17 வயதான மலாலா தான் மிகவும் சிறிய வயதில் இந்த விருதினை வென்றவராவார்.

பெண் பிள்ளைகளின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்துவந்த மலாலா, 2012-ம் ஆண்டு அக்டோபரில் தாலிபன் துப்பாக்கிதாரிகளால் தலையில் சுடப்பட்டார்.

குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறை மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியமைக்காக இருவருக்கும் இம்முறை அமைதிக்கான நோபல் பரிசினை வழங்குவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.