வடகொரிய தலைவர் எங்கே ?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடகொரிய தலைவர் எங்கே ? - காணொளி

சர்வதேச மட்டத்தில் இப்போது மிகவும் அதிகமாக அசை போடப்படும் விடயம், வடகொரிய தலைவர் கிம் யொங் உண் எங்கே போனார் என்பதாகும்.

நீண்ட நாட்களாக அவர் பொது வைபவங்களில் தென்படாமல் இருப்பது பலவிதமான வதந்திகளுக்கு வழி செய்துள்ளது.

கம்யூனிஸ வடகொரியாவின் 69 வது ஆண்டு நிறைவு வைபவத்திலும், அங்கு பெரிதாகப் போற்றப்படும் அந்தத் தலைவரைக் காணவில்லை.

இந்த மர்மம் குறித்த ஊகங்களை குறைத்துப் பேசும் அந்த நாட்டின் அரசாங்க ஊடகம், அவருக்கு அசௌகர்யம் தரும் உடற்சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றது.

ஆனால், அவருக்கு மிகவும் கடுமையான சுகவீனம் என்றும், அங்கு ஒரு அரசியல் சதிப் புரட்சி நடந்துவிட்டதாகவும் வதந்திகள் உலாவருகின்றன.

வடகொரியாவுக்கான பிபிசியின் செய்தியாளர் ஸ்டீவ் இவான்ஸ் அவர்களின் காணொளி.