இபோலா பரவியுள்ள லைபீரியாவில் சுகாதாரப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் தோல்வி

லைபீரியாவில் இபோலா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பாடுபடும் மருத்துவ தாதிமாரும் உதவியாளர்களும் முன்னெடுத்த தேசிய மட்டத்திலான வேலைநிறுத்தப் போராட்டம் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES
Image caption அபாயகால கொடுப்பனவு கேட்டு வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருந்தது.

பெரும்பாலான சுகாதாரப் பணியாளர்கள் வழமைபோல வேலைக்குத் திரும்பியதாக மொன்ரோவியாவில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

வேலைநிறுத்தப் போராட்டத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று மருத்துவப் பணியாளர்களுக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக சுகாதாரப் பணியாளர்களின் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இபோலா நோயாளிகளை பராமரிக்கும் பணியாளர்களுக்கு கூடுதல் அபாயகால கொடுப்பனவும் பாதுகாப்புக் கருவிகளும் காப்புறுதியும் வழங்கவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

லைபீரியாவில் சுகாதாரப் பணியாளர்கள் 95 பேர் இபோலா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே உடன்பட்ட தொகையிலும் பார்க்க கூடுதலான அபாயகால கொடுப்பனவை கொடுப்பதற்கு வசதி இல்லை என்று அரசாங்கம் கூறுகின்றது.

இந்தச் செய்தி குறித்து மேலும்