6 மாதமாகியும் மீட்கப்படாத 219 சிறுமிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

6 மாதமாகியும் மீட்கப்படாத 219 சிறுமிகள் - காணொளி

போக்கோ ஹராம் அமைப்பினால் நைஜீரியாவில் 6 மாதங்களுக்கு முன்னதாக கடத்தப்பட்ட 219 பள்ளிக்கூடச் சிறுமிகளை விடுதலை செய்யுமாறு செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

அந்தப் பெண்களை மீட்கத் தவறியது மாத்திரமல்லாமல், அந்த விடயத்தில் உரிய அக்கறை காட்டாமலும் இருப்பதாக அவர்கள் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அந்தப் சிறுமிகளின் பெற்றோர் தமது குழந்தைகளின் நிலை தெரியாது பெரும் வேதனையில் இருக்கிறார்கள்.

ஆனால் போக்கோ ஹராமால் ஆட்கள் கடத்தப்படுவது அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவை குறித்து பிபிசியின் வில் றொஸ் அவர்களின் காணொளி.